பருகலாம் குறளமுதம்! படிக்கலாம் வாங்க!

தமிழ் வளர்ச்சித் துறை கோவை மாவட்டம்
பருகலாம் குறளமுதம்! படிக்கலாம் வாங்க!
11.07.2025 வெள்ளிக்கிழமை, சரவணம்பட்டி, ரூபி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை கோவை மாவட்டம், மற்றும் ரூபி பதின்ம மேல்நிலைப்பள்ளி இணைந்து தொடங்கும் திருக்குறள் திருப்பணிகள் நுண் பயிற்சி வகுப்பு தொடக்க விழா 2025 வெகு சிறப்பாக நடைபெற்றது. திரு இரா. சுகுமார் ரூபி பள்ளியின் நிறுவுநர் வரவேற்புரை நல்கினார், முனைவர் அன்பரசி துணை இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை கோயம்புத்தூர் மாவட்டம், நோக்கவுரை வழங்கி திருக்குறளின் முக்கியத்துவத்தையும் மாணவர்களின் வாழ்வின் அன்றாட நிகழ்வின் திருக்குறளின் பங்களிப்பு பற்றியும் தெளிவாக விளக்கினார்.
திரு நித்தியானந்த பாரதி நிறுவனத் தலைவர், கணபதி தமிழ்ச் சங்கம், முனைவர் மு. க. அன்வர் பாட்சா, தமிழ் செம்மல், பல்திறன் வளர் இலக்கியமாமணி மற்றும் கருங்கல் சி. கண்ணன் நிறுவனத் தலைவர் தமிழன்னை தமிழ்ச் சங்கம், கன்னியாகுமரி மாவட்டம் ஆகியோர் சிறப்புரை வழங்கி திருக்குறளின் மகத்துவத்தை மாணவர்கள் மனதில் பதியுமாறு எடுத்துரைத்தனர். திரு விஜய் சண்முகம் பாரதி மூத்தோர் பாலர் நலவாழ்வு அறக்கட்டளையின் தலைவர், மருத்துவர் திரு கோவிந்தன்,பாரதி மூத்தோர் பாலர் நலவாழ்வு அறக்கட்டளையின் செயலாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி நிகழ்வினை சிறப்பித்தனர். பருகலாம் குறளமுதம் படிக்கலாம் வாங்க என்ற தமிழ்நாடு அரசின் மதிப்புமிகு திட்டத்தை சிறப்பிக்கும் வகையில் ரூபி பதின்ம மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் திருவள்ளுவர் வேடமணிந்தும், திருக்குறள் பாடல் பாடியும், குறளின் சிறப்பை உணர்த்தும் கவிதை படித்தும் நிகழ்விற்கு சிறப்பூட்டினர் . விழா நடுவில் கேட்கப்பட்ட திருக்குறள் தொடர்பான வினாக்களுக்கு விடையளித்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்து. திருமதி . மாசிலாமணி ரூபி பதின்ம மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை நன்றியுரையாற்றி நிகழ்வினை நிறைவு செய்தார்.